Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

முன்விரோதம் காரணமாக…. மோட்டார் சைக்கிள் தீ வைத்து எரிப்பு…. கைது செய்த போலீஸ்….!!

மோட்டார் சைக்கிளை தீ வைத்து எரித்தவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள முடிவைத்தானேந்தல் பகுதியில் ஜோதி என்பவர் வசித்து வருகிறார். இவர் தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் தூய்மை பணியாளராக வேலை பார்த்து வருகிறார். இவர் தனது மோட்டார் சைக்கிளை வீட்டின் பின்புறம் நிறுத்தி வைத்துள்ளார்.

இந்நிலையில் பக்கத்து வீட்டில் வசிக்கும் ஜெயராஜ் என்பவர் முன்விரோதம் காரணமாக ஜோதியின் மோட்டார் சைக்கிளை பெட்ரோல் ஊற்றி எரித்துள்ளார். இதில் மோட்டார் சைக்கிள் முற்றிலும் எரிந்து நாசமானது. இதுகுறித்து ஜோதி புதுக்கோட்டை காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் ஜோதியை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Categories

Tech |