Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

பிளான் போட்டு பண்ணிருக்காங்க…. அடுத்தடுத்த கடைகளில் நடந்த சம்பவம்…. உரிமையாளர்களுக்கு காத்திருந்த அதிர்ச்சி….!!

அடுத்தடுத்து 4 கடைகளில் மர்மநபர்கள் திருடிய சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தில் உள்ள சேந்தமங்கலம் பிரிவு சாலையில் மணிகண்டன் என்பவர் 3 சிறிய கடைகளை நடத்தி இனிப்பு, காரம் போன்ற மிட்டாய் வியாபாரம் செய்து வருகிறார்.இந்நிலையில் சம்பவத்தன்று இரவு மணிகண்டன் கடைகளை பூட்டிவிட்டு வீட்டிற்கு சென்றுவிட்டு மறுநாள் காலையில் கடைக்கு வந்து போது 3 கடையின் பூட்டுகளும் உடைக்கப்பட்டு இருந்துள்ளது.

இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த மணிகண்டன் கடைக்குள் சென்று பார்த்தபோது கடையில் 37 ஆயிரம் ரூபாய் திருடு போயிருந்தது. அதேபோல் அந்த பகுதியில் மற்றொரு மிட்டாய் கடை வைத்திருக்கும் சுரேஷ் என்பவரது கடையிலும் 10 ஆயிரம் ரூபாய் திருடு போயிருந்ததுள்ளது. இதுகுறித்து மணிகண்டன் ராசிபுரம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

அந்தப் புகாரின் அடிப்படையில் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகின்றனர். மேலும் இந்த திருட்டு வெகு நாட்களாக திட்டம்போட்டு நடந்தது என போலீசார் தெரிவித்துள்ளனர். இந்நிலையில் அடுத்தடுத்த கடைகளில் நடந்த இந்த திருட்டு சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Categories

Tech |