சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த வாலிபருக்கு நீதிமன்றம் 23 ஆண்டுகள் ஜெயில் தண்டனை விதித்து அதிரடியாக உத்தரவிட்டது.
விருதுநகர் மாவட்டத்திலுள்ள அல்லம்பட்டியில் கூலித் தொழிலாளியான பாண்டியராஜன் என்பவர் வசித்து வருகிறார். இவர் கடந்த 2016-ஆம் ஆண்டு அதே பகுதியில் வசிக்கும் பத்தாம் வகுப்பு படிக்கும் மாணவியை கடத்தி சென்று பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இதுகுறித்து மாணவியின் பெற்றோர் அளித்த புகாரின் பேரில் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் பாண்டியராஜனை கைது செய்துள்ளனர்.
இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் பாண்டியராஜனுக்கு 3000 ரூபாய் அபராதமும், 23 ஆண்டுகள் ஜெயில் தண்டனையும் விதித்து அதிரடியாக உத்தரவிட்டது. மேலும் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு 10 லட்சம் ரூபாய் நிவாரணம் வழங்கவும் நீதிபதி பரிந்துரை செய்துள்ளார்.