Categories
கரூர் மாவட்ட செய்திகள்

“இரு மொழியில் தகவல்” ஆட்கள் தேவை…. கரூரில் பரபரப்பு….!!

நிறுவனங்களில் பணிபுரிய இந்தி மற்றும் வங்க மொழியில் ஆட்கள் தேவை என அறிவிப்பு சுவரொட்டி ஒட்டப்பட்டுள்ளது.

கரூர் மாவட்டம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் ஜவுளி உற்பத்தி மற்றும் ஏற்றுமதி, விசைத்தறி, பஸ் கூண்டு கட்டுதல் மற்றும் கொசு வலை போன்ற பல நிறுவனங்கள் உள்ளது. இந்நிலையில் இம்மாவட்டத்தில் பல தொழில் மற்றும் வர்த்தக நிறுவனங்கள் உள்ளது. இதில் ஆயிரத்திற்கும் அதிகமான தொழிலாளர்கள் வேலை பார்த்து வருகின்றனர். தற்போது திருமாநிலையூரில் இருக்கும் தனியார் நிறுவனத்திற்கு பணிபுரிய ஆட்கள் தேவை என இம்மாவட்ட சுற்று வட்டார பகுதிகளில் சுவரொட்டி ஒட்டப்பட்டுள்ளது.

இதில் முதலில் ஆங்கிலத்தில் வாண்டட் என்றும், அதனைத் தொடர்ந்து இந்தி, வங்க மொழியிலும் 4-வதாக தமிழில் வேலைக்கு ஆட்கள் தேவை என அச்சிடப்பட்டுள்ளது. இதனை அடுத்து தமிழில் தறி ஓட்டுனர், சூப்பர்வைசர், பாவு ஓட்டுபவர் மற்றும் தறி மெக்கானிக் தேவை எனவும்,  முன்அனுபவம் உள்ளவர்கள் மற்றும் அனுபவம் இல்லாதவர்களுக்கு தகுதிக்கேற்ற சம்பளம் வழங்கப்படும் என்ற வாசகமும் இடம் பெற்றுள்ளது.

இதனைத் தொடர்ந்து தமிழில் சுற்றியிருக்கும் வார்த்தைகள் இந்தி மொழியிலும் அச்சிட்டு அதன் கீழே ஆங்கிலத்திலும் அச்சிட்டுள்ளனர். மேலும் இம்மாவட்டத்தில் வட மாநிலங்களைச் சேர்ந்த 7 ஆயிரத்திற்கும் அதிகமானவர்கள் தங்களது குடும்பத்துடன் தங்கி பணியாற்றி வருகின்றனர். ஆதலால் அவர்கள் அறிந்து கொள்ளும் வகையில் இந்தி, வங்க மொழியில் ஆட்கள் தேவை எனவும், பிற விவரங்களை தமிழ், இந்தி மற்றும் ஆங்கிலத்தில் அச்சிடப்பட்டுள்ளது.

Categories

Tech |