மோட்டார் சைக்கிள் மோதிய விபத்தில் சாலையில் நடந்து சென்ற வாலிபர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள வேப்பந்தட்டை இதில் லட்சுமிராஜன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் அப்பகுதியில் இருக்கும் சாலையில் நடந்து சென்றுள்ளார். அப்போது அண்ணாதுரை என்பவர் ஓட்டி வந்த மோட்டார் சைக்கிள் லட்சுமிராஜன் மீது பயங்கரமாக மோதியது.
இந்த விபத்தில் படுகாயமடைந்த லட்சுமிராஜனை அருகில் உள்ளவர்கள் மீட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். ஆனால் அங்கு அளிக்கப்பட்ட சிகிச்சை பலனின்றி லட்சுமிராஜன் பரிதாபமாக இறந்துவிட்டார். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் அண்ணாதுரையை கைது செய்து விசாரணை நடத்துகின்றனர்.