Categories
புதுச்சேரி மாவட்ட செய்திகள்

குப்பைத் தொட்டிக்குள் நாட்டு வெடிகுண்டு வெடித்து விபத்து – தொழிலாளி காயம்

குப்பைத் தொட்டிக்குள் இருந்த நாட்டு வெடிகுண்டு வெடித்ததில் பேப்பர் சேகரிக்கும் தொழிலாளி காயம் அடைந்தார்.

புதுச்சேரி, முத்தியால்பேட்டை தொகுதிக்குட்பட்ட பெருமாள் நாயுடு வீதி சந்திப்பில் உள்ள குப்பைத் தொட்டிலிருந்து பேப்பர் சேகரிக்கும் தொழிலாளி செல்வம் என்பவர் பிளாஸ்டிக், பேப்பர்களை சேகரித்து கடையில் போடுவதை வழக்கமாகக் கொண்டுள்ளார்.

இதேபோல் ஞாயிற்றுக்கிழமை குப்பை தொட்டியிலிருந்த பேப்பர்களை எடுத்துக்கொண்டிருந்த போது, அதில் இருந்த நாட்டு வெடிகுண்டு திடீரென வெடித்தது. இதில் அவருடைய கையில் பலத்த காயம் ஏற்பட்டது.

இதையடுத்து அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. குப்பைத் தொட்டியில் நாட்டு வெடிகுண்டு வெடித்த சம்பவம் தொடர்பாக முத்தியால்பேட்டை காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து, குப்பைத் தொட்டியில் நாட்டு வெடிகுண்டை வீசிச்சென்றது யார்? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

கடந்த மாதம் நாட்டு வெடிகுண்டு வீசி கொலை செய்யப்பட்ட பிரபல ரவுடி அன்பு ரஜினி வீட்டின் அருகே உள்ள குப்பை தொட்டியில், நாட்டு வெடிகுண்டு தற்போது வெடித்திருப்பது மேலும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

Categories

Tech |