இன்றைய தின நிகழ்வுகள்
1138 – கர்தினால் கிரெகோரியோ கோண்டி எதிர்-திருத்தந்தையாக ஆறாம் விக்டர் என்ற பெயரில் நியமிக்கப்பட்டார்.
1567 – எண்பதாண்டுப் போர் ஆரம்பமானது.
1639 – ஆர்வர்டு கல்லூரிக்கு சமயவாதி யோன் ஆர்வர்டு என்பவரின் பெயர் இடப்பட்டது.
1640 – இலங்கையில் காலிக் கோட்டை ஒல்லாந்தரால் கைப்பற்றப்பட்டது. கோசுட்டர் இலங்கையின் இடச்சு ஆளுநராக நியமிக்கப்பட்டார்.[1]
1697 – கடைசி மாயா பேரரசின் தலைநகரம் நோச்பெட்டென் எசுபானிய தேடல் வெற்றி வீரர்களிடம் வீழ்ந்தது.
1781 – வில்லியம் எர்செல் யுரேனசு கோளைக் கண்டுபிடித்தார்.
1809 – சுவீடன் மன்னர் நான்காம் குசுத்தாவ் அடொல்ஃப் இராணுவப் புரட்சியில் பதவியிழந்தார்.
1865 – அமெரிக்க உள்நாட்டுப் போர்: அமெரிக்க மாநிலங்களின் கூட்டமைப்பு ஆப்பிரிக்க அமெரிக்கப் படையினரைப் பயன்படுத்த இணங்கியது.
1881 – உருசியாவின் இரண்டாம் அலெக்சாந்தர் அவரது அரண்மனைக்கு அருகே நடந்த குண்டுத் தாக்குதலில் கொலை செய்யப்பட்டார். (யூலியன் நாட்காட்டியில் இது மார்ச் 1 இல் இடம்பெற்றது).
1884 – எகிப்தின் கட்டுப்பாட்டுக்குள் இருந்த கர்த்தூம் நகர் மீதான சூடான் மகுதிய இயக்கத்தின் முற்றுகை ஆரம்பமானது.
1900 – இரண்டாம் பூவர் போர்: பிரித்தானியப் படைகள் ஆரஞ்சு விடுதலை இராச்சியத்தின் புளும்பொன்டின் நகரைக் கைப்பற்றினர்.
1900 – பிரான்சில் பெண்கள் மற்றும் சிறுவர்களின் வேலை நேரம் சட்டப்படி 11 மணி நேரமாகக் குறைக்கப்பட்டது.
1908 – நெல்லைக்கு வந்த வ.உ.சி, சுப்பிரமணிய சிவா, பத்மநாப அய்யங்கார் ஆகியோர் கைது செய்யப்பட்டதை அடுத்து திருநெல்வேலியில் எழுச்சி ஏற்பட்டது. நால்வர் கொல்லப்பட்டனர்.
1921 – மங்கோலியா சீனாவிடம் இருந்து தனது விடுதலையை அறிவித்தது.
1930 – புளூட்டோ கண்டுபிடிக்கப்பட்ட செய்தி ஆர்வர்டு கல்லூரி வான்காணகத்திற்கு தந்தி மூலம் தெரிவிக்கப்பட்டது.
1933 – பெரும் பொருளியல் வீழ்ச்சி: அமெரிக்க அரசுத்தலைவர் பிராங்க்ளின் ரூசவெல்ட் அறிவித்த கட்டாய 3-நாள் “வங்கி விடுமுறை” முடிவடைந்து அமெரிக்க வங்கிகள் மீண்டும் திறக்கப்பட்டன.
1940 – இந்திய விடுதலைப் போராட்ட வீரர் உதம் சிங் லண்டனில் இடம்பெற்ற பொதுக்கூட்டத்தில் வைத்து இந்தியாவின் முன்னாள் ஆளுநர் மைக்கேல் ஒ’டுவையர் என்பவரை சுட்டுக் கொன்றார்.
1940 – உருசிய-பின்லாந்து குளிர்காலப் போர் முடிவுக்கு வந்தது.
1943 – பெரும் இன அழிப்பு: செருமனியப் படையினர் போலந்தின் யூதக் குடியேற்றங்களை அழித்தனர்.
1954 – முதலாம் இந்தோசீனப் போர்: வோ இங்குயென் கியாப் தலைமையிலான வியட் மின் படைகள் பிரெஞ்சுப் படைகளைத் தாக்கினர்.
1957 – கியூபாவின் அரசுத்தலைவர் புல்ஜென்சியோ பாட்டிஸ்ட்டாவைக் கொல்ல மாணவப் புரட்சிவாதிகள் எடுத்த முயற்சி தோல்வியில் முடிந்தது.
1969 – அப்பல்லோ 9 விண்கலம் பாதுகாப்பாக பூமி திரும்பியது.
1979 – கிரெனடாவில் இடம்பெற்ற இராணுவப் புரட்சி ஒன்றில் அதன் பிரதமர் எரிக் கெய்ரி பதவியில் இருந்து அகற்றப்பட்டார்.
1988 – உலகின் மிக நீளமான கடலடிச் சுரங்கம், செய்க்கான் சுரங்கம், சப்பானில் கட்டி முடிக்கப்பட்டது.
1992 – கிழக்கு துருக்கியில் இடம்பெற்ற 6.8 ரிக்டர் அளவு நிலநடுக்கத்தில் 498 பேர் உயிரிழந்தனர்.
1996 – இசுக்காட்லாந்து, டன்பிளேன் நகரில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு நிகழ்வில் 16 மாணவர்களும் ஓர் ஆசிரியரும் சுட்டுக் கொல்லப்பட்டனர். கொலையாளி தன்னைத் தானே சுட்டுத் தற்கொலை செய்து கொண்டான்.
1997 – இந்தியாவின் பிறரன்பின் பணியாளர்கள் சபை அதன் தலைவர் அன்னை தெரேசாவின் இடத்துக்கு நிர்மலா ஜோஷியைத் தேர்ந்தெடுத்தது.
2003 – இத்தாலியில் 350,000-ஆண்டு பழமையான மனித அடிச்சுவடுகள் கண்டுபிடிக்கப்பட்டதாக நேச்சர் இதழ் அறிவித்தது.
2007 – 2007 உலகக்கோப்பை துடுப்பாட்டம் (கிரிக்கெட்) போட்டிகள் மேற்கிந்தியத் தீவுகளில் ஆரம்பமானது.
2008 – தங்கத்தின் விலை நியூயார்க்கில் முதல் தடவையாக அவுன்சிற்கு $1,000 ஐத் தாண்டியது.
2012 – சுவிட்சர்லாந்தில் சுரங்கம் ஒன்றில் பேருந்து ஒன்று விபத்துக்குள்ளாகியதில் 28 பேர் உயிரிழந்தனர்.
2013 – திருத்தந்தை பிரான்சிசு 266-வது திருத்தந்தையாக கத்தோலிக்க திருச்சபையால் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
2016 – அங்காராவின் மத்திய பகுதியில், குண்டுவெடிப்பு மேற்கொள்ளப்பட்டதில், 37 பேர் கொல்லப்பட்டனர், 127 பேர் காயமடைந்தனர்.
இன்றைய தின பிறப்புகள்
1855 – பெர்சிவால் உலோவெல், அமெரிக்க வானியலாளர், கணிதவியலாளர் (இ. 1916)
1899 – புர்குல ராமகிருஷ்ண ராவ், ஐதராபாது மாநில முதலமைச்சர் (இ. 1967)
1941 – மஹ்மூட் தர்வீஷ், பாக்கிஸ்தானியக் கவிஞர் (இ. 2008)
1949 – சலாகுதீன் காதர் சௌத்ரி, வங்காளதேச அரசியல்வாதி (இ. 2015)
1969 – விஜயேந்திர சரஸ்வதி, காஞ்சி காமகோட்டி பீடத்தின் 70-வது சங்கராச்சாரியார்
1980 – வருண் காந்தி, இந்திய அரசியல்வாதி
இன்றைய தின இறப்புகள்
1881 – இரண்டாம் அலெக்சாந்தர், உருசியப் பேரரசர் (பி. 1818)
1906 – சூசன் பிரவுன் அந்தோனி, அமெரிக்க செயற்பாட்டாளர் (பி. 1820)
1936 – கா. நமச்சிவாய முதலியார், தமிழகத் தமிழறிஞர், பேராசிரியர் (பி. 1876)
1941 – ம. வே. மகாலிங்கசிவம், ஈழத்துத் தமிழறிஞர், புலவர், சொற்பொழிவாளர் (பி. 1891)
1953 – டி. என். தீர்த்தகிரி, இந்திய விடுதலை இயக்க செயற்பாட்டாளர் (பி. 1880)
1972 – திருவாளப்புத்தூர் சுவாமிநாதபிள்ளை, தமிழக நடன ஆசிரியர்
1982 – ஏ. நாகப்பச் செட்டியார், இந்தியத் தொழிலதிபர் (பி. 1915)
1986 – பண்டிதமணி சி. கணபதிப்பிள்ளை, ஈழத்துத் தமிழறிஞர் (பி. 1899)
1986 – மர்ரே ராஜம், தமிழகத் தொழிலதிபர், பதிப்பாளர், கொடையாளர் (பி. 1904)
2000 – பி. பி. குமாரமங்கலம், இந்திய இராணுவப் படைத் தலைவர் (பி. 1913)
2006 – கென்னத் ஸ்ட்ரீட், அமெரிக்க வேதியியலாளர் (பி. 1920)
2015 – தி. சு. கிள்ளிவளவன், தமிழ்நாட்டு அரசியலாளர், எழுத்தாளர், இதழாளர் (பி. 1926)
2015 – சூசெட் ஜோர்டன், பெண்ணுரிமைச் செயற்பாட்டாளர் (பி. 1974)