மயில்களை கொள்பவர்களுக்கு கடும் தண்டனை விதிக்குமாறு சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள குரும்பட்டி பகுதியில் சாவத்திரி என்பவருடைய நிலத்தை சண்முகம் என்பவர் குத்தகைக்கு எடுத்து விவசாயம் செய்து வருகிறார். இந்நிலையில் சண்முகம் தனது நிலத்தில் நெற்பயிர் வளர்த்து வந்தார். அதன்பின் நெற்பயிரை சேதம் செய்வதாக கூறி மயில்களுக்கு விஷம் வைத்து கொன்றுள்ளார். இதில் 12 மயில்கள் பரிதாபமாக உயிரிழந்துள்ளது. இது பற்றி தகவலறிந்த வனத்துறையினர் விரைந்து சென்று சண்முகத்தை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதனையடுத்து ஒரு மாதத்தில் ஆலங்காயம் வனத்துறைக்கு சொந்தமான பகுதிகளில் 25-திற்கும் அதிகமான மயில்கள் விஷம் வைத்து கொல்லப்பட்டுள்ளது. இது தொடர்பாக வனத்துறையினர் எளிய வழக்குகள் மற்றும் அபராதத்துடன் முடிப்பதால் இது போன்ற சம்பவங்கள் நடப்பது தொடர்ந்து வருகிறது. மேலும் தேசிய பறவையான மயில்கள் கொள்பவர்களுக்கு கடும் தண்டனை விதிக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.