ரஷ்யாவில் உள்ள இந்திய மாணவர்களுக்கான பாதுகாப்பு அச்சுறுத்தல்கள் எதுவும் இல்லாததால் அவர்களின் படிப்பை தொடரலாம் என்று இந்திய தூதரகம் தெரிவித்துள்ளது.
உக்ரைன்- ரஷ்யா போரானது தொடர்ந்து நீடித்து வருவதால், உலக நாடுகள் ரஷியா மீது பல தடைகளை விதித்து வருகிறது. இதன் காரணமாக அங்கு படிக்கின்ற இந்திய மாணவர்களின் நிலை கேள்விக்குறியாகியுள்ளது. இந்நிலையில் இந்திய அதிகாரிகளின் தொடர்பில் ரஷ்யாவில் உள்ள இந்திய மாணவர்கள் இருப்பதாகவும் அவர்களுக்கு எந்தவித பாதுகாப்பு அச்சுறுத்தல்கள் இல்லை எனவும் ரஷ்யாவில் உள்ள இந்திய தூதரகம் தெரிவித்துள்ளது.
ஆகவே ரஷ்யாவில் இந்திய மாணவர்கள் தங்கள் படிப்பை மீண்டும் தொடரலாம் என்றும் வங்கிகள் முடக்கப்பட்டுள்ள நிலையில், மாணவர்கள் தங்கள் நாட்டிற்கு திரும்பினால் தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து ஆன்லைன் மூலம் பல்கலைக்கழகங்களில் வகுப்புகள் எடுப்பதற்கு இந்திய தூதரகம் வலியுறுத்தியுள்ளதால் மாணவர்கள் குறிப்பிட்ட பல்கலைக்கழகங்களை தொடர்பு கொண்டு தங்கள் படிப்பினை தொடரலாம் என்று தெரிவித்துள்ளது.