சுமார் ஆறு ஆண்டுகளுக்கு முன் காணாமல் போன மகனை ஆதார் கார்டு மூலமாக தாயுடன் சேர்த்த சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பரத்குமார் என்ற ஒரு சிறுவன் 2016 ஆம் ஆண்டு தனது தாய் பர்வதம்மாள் சந்தைக்கு காய்கறிகள் விற்க வந்த போது காணாமல் போயிருக்கிறார். இது பற்றி எலஹன்ஹா காவல் நிலையத்தில் அந்த சிறுவனின் தாய் புகார் அளித்துள்ளார். ஆனால் குழந்தை காணாமல் போனதற்கு எந்த ஒரு ஆதாரமும் கிடைக்கவில்லை. ஆனால் பரத் காணாமல் போன நாளிலிருந்து சுமார் 10 மாதங்களுக்கு பின் மகாராஷ்டிரா மாநிலம் நாக்பூர் வந்த அடைந்திருக்கிறார். நாக்பூர் ரயில் நிலையத்தில் சுற்றித் திரிந்த அந்த சிறுவனை அங்கிருந்த காவலர்கள் மீட்டு காப்பகத்தில் ஒப்படைத்தனர்.
பரத்க்கு ஆதார் அட்டை எடுக்க முயன்றபோது அவன் பெயரில் ஏற்கனவே ஆதார் அட்டை இருப்பது தெரியவந்தது. உடனடியாக மும்பை மண்டல அதிகாரிகளை தொடர்பு கொண்டு காப்பக அதிகாரிகள் உதவி கேட்டுள்ளனர். அப்போது பரத்தின் கைரேகை பெங்களூருவில் உள்ள ஒரு சிறுவனின் ஆதார் அட்டையுடன் ஒத்துப் போவதாக கூறியுள்ளனர். உடனடியாக அந்த சிறுவனின் விபரங்களை பெற்று கர்நாடக அதிகாரிகளுக்கு தொடர்பு கொண்டு சிறுவனின் தாயை தொடர்பு கொண்டு சுமார் ஆறு ஆண்டுகளுக்கு முன் காணாமல் போன மகனை தாயுடன் சேர்த்துள்ளனர். இச்சம்பவம் அப்பகுதி பெரும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.