ரஷ்யா-உக்ரைன் போர் இரண்டு வாரங்கள் கடந்த நிலையில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு தான் இரண்டு நாட்டு பேச்சுவார்த்தையின் காரணமாக தற்காலிகமாக ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. இரண்டு நாடுகளிலும் போரின் காரணமாக உயிரிழப்புகள் அதிகளவில் ஏற்பட்டுள்ளதாக கூறப்பட்டாலும் இன்னும் அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் எதுவும் வெளியிடப்படவில்லை. போர் காரணமாக சர்வதேச அளவில் வணிக ரீதியாக பல்வேறு மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன.
குறிப்பாக எரிபொருள் விலை கணிசமாக உயர்ந்துள்ளது. ஏற்கனவே உலக நாடுகள் பொருளாதாரத்தில் சிக்கி தவித்து வரும் நிலையில் தற்போது விலைவாசி புதிய உச்சத்தை தொட்டது. அந்தவகையில் புதுச்சேரியில் கடந்த இரண்டு வாரங்களில் மட்டும் பாமாயில் விலை லிட்டருக்கு 50 முதல் 55 ரூபாய் வரை அதிகரித்துள்ளது. அதேபோல தற்போது கட்டுமான பொருட்களான சிமெண்ட், கம்பி விலையும் கணிசமாக அதிகரித்துள்ளது. இரண்டு வாரங்களுக்கு முன்பு ரூ.380 க்கு விற்பனை செய்யப்பட்ட ஒரு மூட்டை சிமெண்ட் தற்போது 410 க்கு விற்பனை செய்யப்படுகிறது. இதனால் கட்டுமான ஒப்பந்ததாரர்கள் மற்றும் பொதுமக்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.