Categories
மாநில செய்திகள்

பள்ளி மாணவர்களே மிஸ் பண்ணிடாதீங்க…. மார்ச்-22 கடைசி தேதி…. வெளியான செம அறிவிப்பு…!!!!

கன்னியாகுமரி மாவட்ட கலெக்டர் அரவிந்த் பள்ளி மாணவர்களுக்கு மகிழ்ச்சியான அறிவிப்பை வெளியிட்டுள்ளார். அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழக விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் கீழ் பள்ளிகளில் படிக்கும் மாணவ மாணவிகள் விளையாட்டுத்துறையில் சாதனை புரியும் விதமாக நல்ல வசதி, தங்குமிடம், சத்தான உணவு ஆகியவற்றுடன் கூடிய சிறப்பு விளையாட்டு விடுதிகள் மற்றும் விளையாட்டுப் பள்ளிகள் தமிழகத்தில் இயங்கி வருகின்றன.

இந்நிலையில் தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் செயல்படும் விளையாட்டு விடுதிகளில் உள்ள விளையாட்டுகளில் பயிற்சி பெற்று சிறந்த விளையாட்டு வீரராக விளங்குவதற்கு 7,8, 9 மற்றும் 11ஆம் வகுப்பு சேர்க்கைக்கான மாவட்ட அளவிலான தேர்வு வரும் 23ஆம் தேதி நாகர்கோவில் அண்ணா விளையாட்டு மைதானத்தில் நடைபெற இருக்கிறது. மாவட்ட, மாநில மற்றும் தேசிய அளவில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும்.

விளையாட்டில் சிறந்து விளங்கும் மாணவர்கள் மற்றும் ஆர்வம் கொண்டுள்ள மாணவர்களுக்கு www.sdat.tn.gov.in என்ற இணையதள முகவரியில் விளையாட்டு விடுதியில் சேர்வதற்கான படிவத்தில் பூர்த்தி செய்ய வேண்டும். பூர்த்தி செய்வதற்கான கடைசி நாள் வருகிற 22-ஆம் தேதி மாலை நான்கு மணிக்குள் சமர்ப்பிக்க வேண்டும். எனவே மாணவ மாணவிகள் விளையாட்டு விடுதிகளில் சேர்ந்து பயன்பெறுமாறு கேட்டுக்கொள்கிறேன் என்று கூறியுள்ளார்.

Categories

Tech |