நாடு முழுவதும் உள்ள சீனியர் சிட்டிசன்களுக்கான வைப்பு நிதி திட்டங்களுக்கான வட்டி விகிதத்தை அதிகரித்து, சூர்யோதய் ஸ்மால் ஃபைனான்ஸ் வங்கி மகிழ்ச்சி தரும் செய்தி வெளியாகியுள்ளது. அதன்படி இந்த அறிவிப்பினை சூர்யோதய் ஸ்மால் ஃபைனான்ஸ் வங்கி வெளியிட்டுள்ளது.
அதாவது வருகிற மார்ச் 10ஆம் தேதி முதல் புதிய வட்டி விகிதங்கள் அமலுக்கு வருவதாக சூர்யோதய் ஸ்மால் ஃபைனான்ஸ் வங்கியானது அறிவித்துள்ளது. இதனைத் தொடர்ந்து சீனியர் சிட்டிசன்களுக்கு இனி வரும் காலங்களில் குறைந்தபட்ச வட்டியாக 3.75 சதவீதம் எனவும் அதிகபட்ச வட்டியாக 7.50 சதவீதமும் வழங்கப்பட உள்ளதாக தெரிவித்துள்ளது. அதன்படி புதிய வட்டி விகிதங்கள் பற்றிய விவரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
7 – 14 நாட்கள் : 3.75%
15 – 45 நாட்கள் : 3.75%
46 – 90 நாட்கள் : 4.75%
91 நாட்கள் – 6 மாதம் : 5.25%
6 மாதம் – 9 மாதம் : 5.75%
9 மாதம் – 364 நாட்கள் : 6.25%
1 ஆண்டு – 1 ஆண்டு 6 மாதங்கள் : 7%
1 ஆண்டு 6 மாதங்களுக்கு மேல் – 2 ஆண்டுகள் : 6.75%
3 ஆண்டுகள் : 7.50%