Categories
சினிமா செய்திகள் தமிழ் சினிமா

“பிரபல பாடகிக்கு கங்கை நதிக்கரையில் நடந்த திருமணம்”… இணையத்தில் பகிர்ந்த போட்டோ…!!!

பாடகியும் நடிகையுமான ஸ்வாகதா பெங்களூரைச் சேர்ந்த தொழிலதிபரை மணந்துகொண்டார்.

தமிழ் சினிமாவில் காயல் மற்றும் இன்ட்ரா உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்திருப்பவர் ஸ்வாகதா. இத்திரைப்படங்கள் இன்னும் திரைக்கு வரவில்லை. பாடகி, நடிகை என பன்முகத் தன்மை கொண்டவராக திகழ்கிறார். இந்நிலையில் ஸ்வாகதா மார்ச் 4-ஆம் தேதி பெங்களூரை சார்ந்த தொழில் அதிபர் அக்ஷய் குமாரை கல்யாணம் செய்து கொண்டார். இவர்களின் திருமணமானது திறந்தவெளியாக இமயமலை அடிவாரத்தில் உள்ள கங்கை ரிஷிகேஷ் நதிக்கரையில்  நடைபெற்றிருக்கின்றன.

 

இந்நிலையில் ஸ்வாகதா திருமணத்தின்போது எடுத்த புகைப்படத்தை இணையதளத்தில் பகிர்ந்துள்ளார். மேலும் அதில் அவர் குறிப்பிட்டுள்ளதாவது, “எங்கள் பெற்றோர்கள் எங்கள் குரு மற்றும் எங்களை ஒன்றிணைத்த அனைவரின் ஆசிர்வாதத்துடன் மார்ச் 4 ஆம் தேதி ரிஷிகேஷில் கங்கை நதிக்கரையில் நடந்த அழகான திருமண விழாவில் அக்ஷய் குமாரை மணந்தேன் கங்கா” என்று பதிவிட்டுள்ளார்.

Categories

Tech |