தென்அமெரிக்க நாடான சிலியின் மிக இளைய அதிபராக கேப்ரியல் போரிக் பதவியேற்றுக் கொண்டாா். தற்போது இடதுசாரி ஆதரவாளரான இவருக்கு 36 வயதே ஆகிறது. 17 வருடங்களாக ராணுவ ஆட்சி நடைபெற்று வந்த சிலி, ஜனநாயகப் பாதைக்குத் திரும்பியபோது கேப்ரியலுக்கு வெறும் நான்கே வயதாக இருந்தது.
சிலியின் புதிய அரசமைப்புச் சட்டம் இயற்றப்பட்டுக் கொண்டிருக்கும் நிலையில், அவா் அந்நாட்டின் அதிபராகப் பொறுப்பேற்பது குறிப்பிடத்தக்கது. கடந்த வருடம் டிசம்பரில் நடந்த அதிபா் தோ்தலின் இரண்டாவது சுற்றில் கன்சா்வேடிவ் கட்சியைச் சோ்ந்த அன்டோனியோ காஸ்டைத் தோற்கடித்து 56% வாக்குகளுடன் கேப்ரில் போரிக் வெற்றி பெற்றாா் என்பது குறிப்பிடத்தக்கது.