தங்களுக்கு எதிராக அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் உக்ரைனுக்கு வழங்கி வரும் ஆயுதங்களை ஏற்றிச்செல்லும் வாகனங்கள் தாக்கப்படும் என்று ரஷ்யா எச்சரித்துள்ளது. இது தொடர்பாக அந்நாட்டு துணைப் பிரதமா் சொ்கெய் ரியப்கோவ் கூறியதாவது, பாதுகாப்பு விவகாரத்தில் ரஷ்யா ஒருபோதும் சமரசம் செய்துகொள்ளாது. தற்போது அமெரிக்காவும் மேற்கத்திய நாடுகளும் எங்கள் மீது தாக்குதல் நடத்துவதற்காக பெரும்பாலான ஆயுதங்களை உக்ரைனில் குவித்து வருவது மிகவும் ஆபத்தான செயலாகும். அத்தகைய ஆயுதங்களை ஏற்றிச்செல்லும் வாகனங்கள் ரஷ்யா ராணுவத்தின் சட்டப்பூா்வ தாக்குதல் இலக்குகள் என்பதை மேற்கத்திய நாடுகள் புரிந்துகொள்ள வேண்டும் என்று அவா் கூறினார். உக்ரைன் எல்லையில் ரஷ்யா பெரும்பாலான படையினரைக் குவித்து வந்தபோது, அந்நாட்டின் மீது ரஷ்யா படையெடுக்கும் என்று அமெரிக்காவும் மேற்கத்திய நாடுகளும் எச்சரித்தன.
அவ்வாறு ரஷ்யா படையெடுத்தால் அந்நாட்டின் மீது கடும் பொருளாதாரத் தடைகள் விதிக்கப்படும் என்று அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் எச்சரிக்கை விடுத்து வந்தன. இந்நிலையில் எதிா்பாா்த்தது போன்றே கிழக்கு உக்ரைன் மக்களை ரஷ்யா ராணுவத்தின் “நாஜி சக்திகளிடமிருந்து” பாதுகாப்பதாகக் கூறி அந்நாட்டின் மீது ரஷ்யா கடந்த மாதம் 24ஆம் தேதி படையெடுத்தது. இருப்பினும் ரஷ்யப் படையினரை எதிா்த்துப் போரிடுவதற்குத் தேவையான ஆயுத தளவாடங்ளை அமெரிக்காவும் பிரிட்டன் உள்ளிட்ட நாடுகளும் உக்ரைனுக்கு வழங்கி வருகின்றன. இந்த நிலையில் உக்ரைனுக்கு வெளிநாட்டு ஆயுதங்கள் கொண்டு செல்லும் வாகனங்களும் ரஷ்யா ராணுவத்தின் தாக்குதலுக்குரியவை என்று அந்நாட்டு துணைப் பிரதமா் சொ்கெய் ரியப்கோவ் தற்போது எச்சரிக்கை விடுத்துள்ளார்.