ரஷ்ய வீரர்களின் பெற்றோருக்கு உக்ரைன் அதிபர் தனது டெலிகிராம் பக்கத்தில் வேண்டுகோள் ஒன்றை விடுத்துள்ளார்.
உக்ரைன் மீது ரஷ்யா தொடர்ந்து 18 வது நாளாக தாக்குதல் நடத்தி வருகிறது. இந்த பேரனது தொடக்கத்தில் உக்ரைனின் ராணுவ தளங்களை அளிப்பது மட்டுமே இலக்காக கொண்டுள்ளது. ஆனால் தற்போது உக்ரைனின் பள்ளிக்கூடங்கள் மற்றும் குடியிருப்பு பகுதிகள், ஆஸ்பத்திரிகள் போன்ற பல பகுதிகளை ரஷ்யா படையினர் தொடர்து தனது தாக்குதல்களை நடத்தி வருகிறது.
இந்நிலையில் உக்ரைன் நாட்டின் அதிபர் வொலடிமிர் ஜெலன்ஸ்கி தன்னுடைய டெலிகிராம் பக்கத்தில் வேண்டுகோள் ஒன்றை விடுத்துள்ளார். அதில் அவர் கூறியதாவது ”ரஷ்யா நாட்டின் தாய்மார்களே உங்கள் பிள்ளைகளை வேறு நாட்டிற்கு சண்டையிட அனுப்ப வேண்டாம். உங்கள் மகன்கள் எங்கே இருக்கிறார்கள் என்று உடனடியாக உறுதிபடுத்திக் கொள்ளுங்கள். அவர்கள் உக்ரைனுக்கு வந்துருந்தால் ஒருவேளை கொல்லப்படலாம் அல்லது சிறைப்பிடிக்கப்படலாம். உக்ரைன் இந்த போரை விரும்பவில்லை. ஆனால் எங்களுடைய தாய் நாட்டை நாங்கள் பாதுகாக்க தேவையான நடவடிக்கையை தொடர்ந்து எடுப்போம்” என கூறியுள்ளார்.