Categories
மாநில செய்திகள்

தமிழக மக்களுக்கு குட்நியூஸ்…! புதிய ரேஷன் கார்டுகள்…. அரசு முக்கிய அறிவிப்பு…!!!!!

தமிழ் நாட்டில் ஏழை, எளிய மக்கள் பயன்பெறும் வகையில் அத்தியாவசிய பொருட்கள் ரேஷன் கடைகளில் மலிவு விலையில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இந்த அத்தியாவசிய பொருட்களை பயனாளிகள் மாதந்தோறும் பெறுவதற்கு வசதியாக டிஜிட்டல் ரேஷன் கார்டுகள் வழங்கப்பட்டு உள்ளது. அதில் அரசின் பல்வேறு நலத் திட்ட உதவிகளை பெறுவதற்கு விண்ணப்பிக்கும்போது இருப்பிடச் சான்றுக்கான முக்கிய ஆவணமாக ரேஷன்கார்டு எடுத்துக்கொள்ளப்படுகிறது. இவற்றின் காரணமாக புதிய ரேஷன் கார்டுகளை பெறுவதற்கு மக்கள் மத்தியில் ஆர்வம் இருந்து வருகிறது.

இந்நிலையில் பயனாளிகளுக்கு வழங்குவதற்காக 2.07 லட்சம் புதிய ரேஷன் கார்டு உதவி ஆணையர் மற்றும் வட்ட வழங்கல் அலுவலகங்களுக்கு அனுப்பி வைத்துள்ளதாக உணவு வழங்கல் துறை தெரிவித்துள்ளது. புதிய ரேஷன் கார்டு கேட்டு 2021 இறுதியில் விண்ணப்பித்தவர்களில் தகுதியான 2 லட்சம் பயனாளிகளுக்கு ரேஷன் கார்டு வழங்க அதிகாரிகள் ஒப்புதல் அளித்துள்ளனர். இந்த புதிய ரேஷன் கார்டு பெறுபவர்கள் ஏப்ரல்  முதல் ரேஷன்  பொருட்கள் வாங்கலாம் என குறிப்பிடப்பட்டுள்ளது.

Categories

Tech |