தக்காளி சாறு அரை ஸ்பூன், தேன் அரை ஸ்பூன், சமையல் சோடா ஒரு சிட்டிகை, மூன்றையும் கலந்து கழுத்தில் போட்டு வர கழுத்தில் உள்ள கருவளையம் சிறிது நாளில் மறைந்துவிடும்.
முகம் மற்றும் மேனி அழகுக்கு கடலை பருப்பு கால் கிலோ, பாசிப் பயறு கால் கிலோ, ஆவாரம்பூ காயவைத்து 100 கிராம், என மூன்றையும் அரைத்து சோப்புக்குப் பதிலாக பயன்படுத்தினால் நல்ல பயன் கிடைக்கும்.
முகம் பொலிவுடன் மாறுவதற்கு பயத்தமாவு 2 டீஸ்பூன் எலுமிச்ச்சை சாறு 1டீஸ்பூன் சேர்த்து போட்டால் தோல் மென்மையாகும் .முகத்தில் உள்ள தழும்பு விரைவில் மறையும் .
வெள்ளரி சாறு 2 ஸ்பூன், துளசி சாறு 2 ஸ்பூன் ,புதினா சாறு 2 ஸ்பூன், எலுமிச்சம் பழச்சாறு 1 டீஸ்பூன் ,அனைத்தையும் நன்றாக கலக்கி முகத்தில் தேய்த்து 15 நிமிடம் கழித்து கழுவினால் முகம் பட்டுப்போல் மென்மையாகும்.
கேரட்டை நன்றாக அரைத்து ஒரு ஸ்பூன் தேன் கலந்து 20 நிமிடம் முகத்தில் பூசி பின் குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும் .
பாலை காய்ச்சும் போது அதில் இருந்து வரும் ஆவியில் முகத்தைக் காட்டி அந்த வியர்வையை துடைக்காமல் காயவிட்டு அரை மணி நேரம் கழித்து முகம் கழுவினால் முகம் பளபளப்பாகும். இவை அனைத்தும் பக்க விளைவுகள் இல்லாத இயற்கை அழகு குறிப்புகள் .