மகாராஷ்டிரா மாநிலம் புனே மாவட்டம் பைப்விவாடி நகரில் உள்ள தனியார் பள்ளியில் பயிலும் மாணவ – மாணவிகளுக்கு சில விதிமுறைகள் படி கட்டண சலுகைகளும் வழங்கப்படுகிறது. ஆனால், அந்த பள்ளியில் பயிலும் 2 மாணவர்களின் பெற்றோர் தங்கள் செலுத்திய கட்டண சலுகை விண்ணப்பத்தை சரிபார்த்து ஒப்புதல் அளிக்கும்படி பள்ளி நிர்வாகத்திடம் கேட்டுள்ளனர்.
அப்போது, அந்த பள்ளி நிர்வாகத்தால் அங்கு நியமிக்கப்பட்டுள்ள பெண் அடியாள் மாணவர்களின் பெற்றோர் மீது தாக்குதல் நடத்தியும், தகாத வார்த்தையாலும் திட்டியுள்ளார். இது குறித்து போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. இதனை தொடர்ந்து வழக்குப்பதிவு செய்த போலீசார் பள்ளி நிர்வாகம் மற்றும் பள்ளியில் பணி புரிந்து வரும் பெண் அடியாள் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.