தமிழ்நாடு அரசு மாற்றுத் திறனாளிகளுக்கான பல நலத்திட்ட உதவிகளை தொடர்ந்து வழங்கி வருகிறது. அந்த வகையில் மாற்றுத்திறனாளிகளுக்கான தேசிய அடையாள அட்டை பெறுவதற்கான பதிவு செய்யும் சிறப்பு முகாம், மாற்றுத் திறனாளிகளுக்கு சிறப்பு வேலைவாய்ப்பு போன்றவை தொடர்ந்து நடத்தப்பட்டு வருகிறது. அதேபோன்று மாத உதவித் தொகையும் தொடர்ந்து அளிக்கப்படுகிறது.
இந்நிலையில் தமிழகம் முழுவதும் மாற்றுத்திறனாளிகளின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதற்கு அனைத்து மாவட்டங்களிலும் வங்கிக்கடன் மேளா நடத்த அனைத்து மாவட்ட கலெக்டர்களுக்கும் தமிழ்நாடு அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. மாற்றுத் திறனாளிகளை சுய தொழில் செய்ய ஊக்குவிக்க வங்கிக் கடன் மேளா நடத்த வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது.