Categories
திருவண்ணாமலை மாவட்ட செய்திகள்

உக்ரைனில் சிக்கிய மகனின் கண்ணீர் வீடியோ…. “எங்க பிள்ளையை மீட்டு தாங்க” மனு கொடுத்த பெற்றோர்….!!

உக்ரைனில் சிக்கிய மாணவர் கண்ணீருடன் வீடியோ வெளியிட்டதை தொடர்ந்து அவரது பெற்றோர் மகனை மீட்டுத் தர வேண்டி மனு கொடுத்துள்ளனர்.

திருவண்ணாமலை மாவட்டம் , ஓசூர் மத்திகிரி  பகுதியில் செபஸ்டியன் ராஜ் என்ற வாய் பேச முடியாத மாற்றுத்திறனாளி வசித்து வருகிறார் . இவர் ஓசூரிலிலுள்ள பிரபலமான கைக்கடிகாரம் தயார் செய்யும் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார்  . இவருடைய மகன் 27 வயதான ஆரோக்கிய செபஸ்டியன் ராஜ்.

உக்ரைனிலுள்ள கெர்சன் நகரில் மரைன் இன்ஜினியரிங் படிப்பு படித்து வருகிறார். இதனிடையே  உக்ரைன் மீது ரஷ்யா பயங்கரமான போர் நடத்தி வருவதால் அங்கிருக்கும் முக்கிய நகரங்கள் பெரும் தாக்குதலால் சேதமாகி உள்ளன. மேலும் பல மாடி கட்டிடங்கள், மருத்துவமனைகள் தரைமட்டமாகியுள்ளது. இதனால் பொதுமக்கள் பாதுகாப்பான இடத்தை தேடி வருகிறார்கள்.

அதுமட்டுமில்லாமல் உணவு மற்றும் அடிப்படை வசதிகள் இல்லாமல் தவித்து வருகின்றார்கள். இந்நிலையில் உக்ரைன் நாட்டில் போர் நடைபெற்றுக் கொண்டிருக்கும் இடத்தில் சிக்கியுள்ள ஓசூர் மாணவர் ஆரோக்கிய ஜெபஸ்டின் ராஜ் கண்ணீருடன் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அந்த வீடியோவில் அவர் கூறியிருப்பது கெர்சன் நகரில் மூன்று மாணவர்கள் உள்பட ஐந்து பேர் சிக்கி தவிக்கின்றோம்.  எங்கு பார்த்தாலும் குண்டுமழை பொழிந்து வருகின்றது. எங்கள் கண்ணெதிரே பல மாடிக் கட்டிடங்கள் விழுந்து தீப்பிடித்து எரிகிறது . ஆகையால்உயிரை காப்பாற்ற மக்கள் நான்கு புறமும் ஓடி திரிகிறார்கள்.

நாங்கள் உதவி கேட்டும் யாரும் உதவ முன்வரவில்லை கெர்சன் நகர் தற்போது ரஷ்யாவின் முழு கட்டுப்பாட்டுக்குள் உள்ளது.  இங்கிருந்து யாரும் எல்லையைத் தாண்ட முடியவில்லை.  நாங்கள் மாஸ்கோவில் உள்ள இந்திய தூதரகத்திற்கு தகவல் தெரிவித்துள்ளோம். ஆகவே உடனே மத்திய மாநில அரசுகள் வெகு விரைவில் நடவடிக்கை எடுத்து எங்களை மீட்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார் .

மேலும்  அந்தப் பகுதியிலிருந்து 200 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள நாட்டின் எல்லைப் பகுதியான ஓடேசா நகருக்கு அனுப்பினால் கூட நாங்கள் பத்திரமாக உயிருடன் திரும்ப முடியுமென அந்த மாணவர் வீடியோவில் கண்ணீருடன் உருக்கமாக கூறியுள்ளார். இதனால் அந்த மாணவரின் பெற்றோர் தங்கள் மகனை மீட்டு தரவேண்டும் என்று கலெக்டர் அலுவலகத்தில் மனு கொடுத்துள்ளனர்.

Categories

Tech |