குழந்தைகள் விளையாடும் பொருள் வெடித்து சிதறியதில் 7 பேர் காயமடைந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஆப்கானிஸ்தான் நாட்டில் தெற்கு ஹெல்மான்ட் மகாணத்தில் மர்ஜா என்னும் மாவட்டம் அமைந்துள்ளது. இந்த மாவட்டத்தில் உள்ள ஒரு விட்டில் குழந்தைகள் விளையாடிக் கொண்டிருந்தபோது திடீரென்று விளையாட்டு பொருள் வெடித்து சிதறியுள்ளது. இந்த விபத்தில் அந்த குடும்பத்தை சேர்ந்த 7 பேர் காயமடைந்துள்ளனர். மேலும் இதில் 2 குழந்தைகள் மிகவும் ஆபத்தான நிலையில் இருப்பதாகவும் ஒரு குழந்தை பலத்த காயமடைந்துள்ளதாகவும் தகவல் கிடைத்துள்ளது.
இச்சம்பவத்தை தொடர்ந்து அந்நாட்டின் மற்றொரு பகுதியான மைமானாவில் இதே போன்று குழந்தைகள் விளையாடும் பொருள் வெடித்து சிதறியுள்ளது. இந்த விபத்தில் இரண்டு குழந்தைகள் படுக்காயமடைந்துள்ளனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரப்பரப்பை ஏற்படுத்தியுள்ளது.