Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

“பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு” அல்பண்டாசோல் மாத்திரைகள்…. மாவட்ட ஆட்சியரின் அறிவிப்பு…!!

குழந்தைகள் மற்றும் பெண்களுக்கு குடற்புழு மாத்திரைகள் வழங்கப்படுவதாக மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு குடற்புழு மாத்திரைகள் வழங்கப்பட  இருக்கிறது. இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் அரவிந்த் அறிக்கை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில் தேசிய குடற்புழு நீக்க தினம் நாளை கொண்டாடப்பட இருப்பதால் குழந்தைகள் மற்றும் பெண்களுக்கு குடற்புழு மாத்திரைகள் வழங்கப்பட இருக்கிறது. எனவே  1 முதல் 19 வயது வரை இருக்கும் குழந்தைகள் மற்றும் 20 முதல் 30 வயதில் இருக்கும் பெண்கள் கட்டாயமாக இந்த மாத்திரைகளை எடுத்துக்கொள்ள வேண்டும். இந்த மாத்திரைகள் 21-ம் தேதி முதல் 27-ம் தேதி வரை வழங்கப்பட  இருக்கிறது.

இந்த மாத்திரைகளை சாப்பிடுவதின் மூலம் இரத்த சோகை, ஊட்டச்சத்துக் குறைபாடு, உடல் வளர்ச்சி குறைபாடு போன்ற பல நோய்களை தடுக்க முடியும். இந்த மாத்திரைகள் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகள், கல்லூரிகள், துணை சுகாதார நிலையங்கள், ஊட்டச்சத்து மையங்கள் போன்ற இடங்களில் வைத்து வாங்கப்படும் என கூறியுள்ளார். இதன் மூலம் 6,94,498 பேர் பயனடைவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. எனவே பெற்றோர்கள்  தங்கள் குழந்தைகளுக்கு கட்டாயம் இந்த மாத்திரைகளை எடுத்துக்கொள்ள அறிவுரை வழங்க வேண்டுமெனவும், பெண்களும் இந்த மாத்திரைகளை உட்கொள்ள வேண்டும் எனவும் ஆட்சியர் கூறியுள்ளார்.

Categories

Tech |