Categories
திருச்சி மாவட்ட செய்திகள்

இங்க கடை போடக்கூடாது… “தீக்குளிக்க முயன்ற வியாபாரி”… சமயபுரம் மாரியம்மன் கோவில் அருகே பரபரப்பு..!!

சமயபுரம் மாரியம்மன் கோவில் தள்ளுவண்டி கடை வைத்த வியாபாரி தீக்குளிக்க முயன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சமயபுரம் மாரியம்மன் கோவிலை சுற்றி படக்கடைகள், கார், விளையாட்டு சாமான்கள் உள்ள கடைகள், பழ கடை, பூக்கடை, கடலை, பொரிகடலை என பல்வேறு பொருட்களை விற்கும் தள்ளுவண்டி கடைகள் உட்பட நிறைய கடைகள் உள்ளன. இந்நிலையில் நேற்றிரவு கோவிலின் பின்புறம் வி.துறையூர் மாரியம்மன் கோவில் பகுதியை சேர்ந்த கணேசன்(35) என்பவர்  தள்ளுவண்டியில் பொரிகடலை விற்றுக் கொண்டிருந்தார்.

அவரை கோவில் அதிகாரிகள் இந்த பகுதியில் தள்ளுவண்டி கடை போடக்கூடாது என்றும் அவரை உடனே கடையை காலிபண்ண வேண்டும் என்று கோவிலில் பணியாற்றும் தனியார் பாதுகாவலரிடம் கூறியுள்ளார்கள். உடனே பாதுகாப்பாளர்கள் கடையை அப்புறப்படுத்தும் பணியில் ஈடுபட்டுள்ளனர். இதனால் கோபமடைந்த கணேசன் சற்று நேரத்தில் ராஜகோபுரம் கடை வீதியில் அமைந்துள்ள கோவில் இணை அலுவலர் அலுவலகத்தின் முன்பாக தனது உடலில் மண்எண்ணெய் ஊற்றி தீக்குளிக்க முயன்றுள்ளார். இதை பார்த்த சமயபுரம் காவல்துறையினர் தடுத்து  நிறுத்தி விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு  ஏற்பட்டுள்ளது.

Categories

Tech |