Categories
மாநில செய்திகள்

தமிழகம் முழுவதும் நாளை முதல் 21 ஆம் தேதி வரை…. சிறுவர்கள், பெண்களுக்கு…. அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு….!!!!

தேசிய குடற்புழு நீக்கம் வாரத்தை முன்னிட்டு தமிழகத்தில் நாளை (மார்ச்14) முதல் 21ஆம் தேதி வரை சிறுவர்கள் மற்றும் பெண்களுக்கு அதன் மாத்திரை வழங்கப்பட இருக்கிறது. இது தொடர்பாக  பொதுசுகாதாரத் துறை வெளியிட்ட செய்திகுறிப்பில், குடற்புழு நீக்கம் வாரம் நாளை முதல் 21ஆம் தேதி வரையிலும் அனுசரிக்கப்படுகிறது. இதனை முன்னிட்டு நடைபெறும் முகாமில் 1-19 வயது வரையிலான சிறார்கள், கருவுறாத மற்றும் பாலுாட்டாத 20-30 வயதுக்கு உட்பட்ட பெண்களுக்கு குடற்புழு நீக்க மாத்திரை வழங்கப்படும். இதில் ஒன்று முதல் இரண்டு வயது குழந்தைகளுக்கு “அல்பெண்டசோல்” அரை மாத்திரையும், 2-19 வயது சிறார்கள், 20-30 வயது பெண்களுக்கு ஒரு மாத்திரையும் வழங்கப்படும்.

இந்த மாத்திரை அனைவருக்கும் பாதுகாப்பானது ஆகும். இந்த முகாமில் 1-19 வயதுடைய 2.39 கோடி சிறார்களும், 20-30 வயதுடைய 54 லட்சத்து 67 ஆயிரத்து 69 பெண்களும் பயனடைய இருக்கின்றனர். இதற்காக 2.54 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டு 3 கோடி குடற்புழு நீக்க மாத்திரை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இந்த மாத்திரையை சாப்பிடுவதன் மூலம் குடற்புழுக்கள் முழுவதும் நீக்கப்படும். மேலும் ரத்தசோகை, ஊட்டச்சத்து குறைபாடு நீங்கும். அத்துடன் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதுடன், நினைவாற்றல், அறிவுத்திறன், உடல் வளர்ச்சியை மேம்படுத்தவும், ஆரோக்கியமாக இருக்கவும் உதவுகிறது. ஆகவே அனைவரும் தயக்கம் இன்றி குடற்புழு நீக்க மாத்திரை சாப்பிடலாம் என்று அதில் கூறப்பட்டுள்ளது.

Categories

Tech |