குழந்தைகளின் நலனை கருதி கடவுளின் பெயரில் போரை நிறுத்துங்கள் என்று போப் ஆண்டவர் ரஷ்யாவிற்கு கோரிக்கை விடுத்துள்ளார்.
உக்ரைன் மீது ரஷ்யா 18-வது நாளாக தனது தாக்குதலை நடத்தி வருகிறது. இந்த நிலையில் இந்த தாக்குதலுக்கு பொதுமக்கள், ராணுவ வீரர்கள் என ஏராளமானோர் உயிரிழந்துள்ளனர். இதற்கிடையில் ஐக்கிய நாடுகள் இந்தப் போரினை நிறுத்தவும், சமரச பேச்சில் ஈடுபடவும் கோரிக்கை விடுத்திருந்தது. இததைத் தொடர்ந்து போப் ஆண்டவரும் போரை நிறுத்த வேண்டுகோள் விடுத்திருந்த நிலையில் ரஷ்யா அதனை ஏற்க மறுத்து விட்டது. இதற்கிடையில் ரஷ்ய படைகள் நேற்று உக்ரைன் மீது நடத்திய தாக்குதலில் குழந்தைகள் உட்பட பலர் உயிரிழந்துள்ளதாக உக்ரைன் அதிபர் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் போப் ஆண்டவர் போரை உடனடியாக நிறுத்துமாறு தனது இணையதள பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில் “ரஷ்யாவின் இந்த போரினால் குழந்தைகள் பலியாவது ஏற்க முடியாது. மேலும் குழந்தைகளின் பெற்றோர்கள் பலியானால் குழந்தைகளின் எதிர்காலம் கேள்விக்குறியாகும் மற்றும் அவர்கள் அனாதை ஆகும் நிலை ஏற்படும். இதனை எல்லாம் சிந்தியுங்கள், சிந்தித்தால் போரை நிறுத்துவததிற்கு வழிபிறக்கும். இதனால் கடவுளின் பெயரில் போரை நிறுத்துவதற்கான ஏற்பாடுகளையும் தொடங்குங்கள்” என்று கூறியுள்ளார்