திண்டுக்கல் மாவட்டம் அம்மை நாயக்கனூரில் பேரூராட்சிக்குட்பட்ட தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கம் ஒன்று செயல்பட்டுவருகிறது. 18 வார்டுகள் அடங்கிய இந்த சங்கத்தில் நடந்து முடிந்த நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலின் போது பொது மக்களின் வாக்குகளை பெற தேர்தல் முடிந்தவுடன் வீடுகள் தோறும் தள்ளுபடி செய்யப்படும் வகையில் வட்டியில்லா கறவை மாடுகள் வழங்கப்படும் என சில திமுக நிர்வாகிகள் கூறியதாக தெரிகிறது. தேர்தல் முடிந்து தற்போது மேயர் உள்ளிட்டோர் பதவியேற்ற நாள் அப்போது மக்கள் வட்டியில்லாமல் லோன் வாங்குவதற்காகவும் உறுப்பினர்களாக சேர்வதற்க்காகவும் கூட்டுறவு சங்க அலுவலகத்தில் கூட்டம் கூட்டமாக வந்து பதிவு பதிவு செய்திருக்கின்றனர்.
ஆனால் கூட்டுறவு சங்க அலுவலகத்தில் விண்ணப்பங்களை வாங்கவும், பதிவுசெய்யவும் பொது மக்களுக்கு சரியான பணியாளர்கள் இல்லாமல் பெரும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். அதோடு இரண்டு பணியாளர்கள் மட்டுமே உள்ளதாகவும் போதிய பணியாளர்கள் மட்டுமின்றி கடந்த ஒரு ஆண்டாக நிரந்தரமான கூட்டுறவு சங்க செயலாளரும் இல்லாததால் கூட்டுறவு சங்கம் மூலம் வழங்கப்படும் அனைத்து வகையான சேவைகளும் சரியான பயனாளிகளுக்கு கிடைக்காத சூழ்நிலை ஏற்படுகிறது. 50க்கும் மேற்பட்டவர்களுக்கு குறிப்பிட்ட வார்டு பகுதி மக்களுக்கு மட்டும் கால்நடை கடன் வழங்கப்பட்டதாகவும், திரும்ப கட்டாத நிலையில் மீண்டும் அவர்களுக்கு வழங்குவதற்கான ஏற்பாடுகள் நடைபெற்றுக் கொண்டிருப்பதாகவும் பொதுமக்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.
அதனால் உடனடியாக அரசு தலையிட்டு முறைகேட்டை சீர் செய்ய வேண்டும் என்ற கோரிக்கை விடுத்துள்ள விவசாயிகள் அனைத்துப் பகுதி மக்களுக்கும் தனியான பயனாளிகளுக்கும் மட்டும் கடன் வழங்க ஏற்பாடு செய்ய வேண்டும் என வேண்டுகோள் வைத்துள்ளனர்.