சிறுமியை திருமணம் செய்து கொடுமைப்படுத்திய வாலிபரை காவல்துறையினர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்துள்ளனர்.
ஈரோடு மாவட்டத்தில் உள்ள நம்பியூர் கழகம் பாளையத்தில் தங்கராஜ் என்பவர் வசித்து வருகிறார். இவர் திருப்பூரில் இருக்கும் ஒரு கம்பெனியில் தொழிலாளியாக வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் அதே நிறுவனத்தில் வேலை பார்க்கும் 17 வயது சிறுமியுடன் தங்கராஜ் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் ஆசை வார்த்தைகள் கூறி சிறுமியை தங்கராஜ் கடந்த சில மாதங்களுக்கு முன்பு திருமணம் செய்துள்ளார். திருமணம் முடிந்த சில நாட்களிலேயே குடிபோதையில் தங்கராஜ் சிறுமியை அடித்து உதைத்ததாக கூறப்படுகிறது. இது குறித்து சிறுமியின் உறவினர்கள் அளித்த புகாரின் பேரில் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தங்கராஜை கைது செய்து சிறையில் அடைத்துவிட்டனர்.