Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

பயணிகள் அளித்த புகார்…. வசமாக சிக்கிய நபர்…. நீதிபதியின் அதிரடி தீர்ப்பு…!!

பயணிகளிடம் இருந்து செல்போன் திருடிய நபருக்கு நீதிமன்றம் 1 1/2 ஆண்டுகள் ஜெயில் தண்டனை விதித்து அதிரடியாக உத்தரவிட்டது.

ஈரோடு வழியாக செல்லும் ரயில்களில் தொடர்ந்து பயணிகளின் செல்போன் திருடு போவதாக ரயில்வே காவல்துறையினருக்கு புகார்கள் வந்துள்ளது. அதன் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் திருடனை தீவிரமாக தேடி வந்துள்ளனர். கடந்த 2021-ஆம் ஆண்டு திண்டுக்கல் மாவட்டத்தை சேர்ந்த சவுண்டப்பன் என்பவரை பயணிகளிடம் செல்போன் திருடிய குற்றத்திற்காக காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

இந்த வழக்கினை விசாரித்த நீதிமன்றம் பயணிகளிடமிருந்து செல்போன் திருடிய குற்றத்திற்காக சவடப்பனுக்கு 1 1/2 ஆண்டுகள் ஜெயில் தண்டனை வழங்கி அதிரடியாக உத்தரவிட்டுள்ளார். அந்த உத்தரவின்படி சவடப்பன் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

Categories

Tech |