Categories
அரியலூர் மாவட்ட செய்திகள்

எங்களுக்கு போகுறதுக்கு பாதை இல்ல… சாலை பணியை தடுத்து நிறுத்தி… போராட்டத்தில் ஈடுபட்ட மக்கள்..!!

சாலைப் பணியை தடுத்து நிறுத்தி கிராம மக்கள் மறியலில் ஈடுபட்டுள்ளனர்.

அரியலூர் மாவட்டத்தில் உள்ள ஜெயங்கொண்டம்  அருகில் கழுவந்தோண்டி கிராமத்திலிருந்து சூசையப்பர் பட்டினம் பாதையாக சூரியமணல் செல்லும் திருச்சி- சிதம்பரம் தேசிய நெடுஞ்சாலை ரோடு போடும் பணி நடைபெற்று வருகிறது. இந்த சாலை பணியை தடுத்து நிறுத்தி கரடிகுளம் கிராம மக்கள் விவசாய நிலங்களுக்கு செல்ல பாதை வசதி செய்து தர வேண்டும் என்று போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்த விளை நிலங்களுக்கு சென்று திரும்ப சாலை வசதி இல்லாததால் அதிகாரிகளுக்கு பலமுறை நாங்கள் புகார் கொடுத்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று தெரிவித்து ஒப்பந்ததாரரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

இது பற்றி அப்பகுதி மக்கள் பேசியது, விளைநிலங்களுக்கு செல்ல கரடி குளத்தில் இருந்து வயல்வெளிக்கு செல்ல நேரடியாக வழி அமைத்து தர வேண்டும். அதற்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லையென்றால் சாலை மறியல் போராட்டம் நடத்துவோம் என்று அப்பகுதி கிராம மக்கள் தெரிவித்துள்ளனர். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது

Categories

Tech |