தேசிய குடற்புழு நீக்க மாத்திரை வழங்கும் முகாம் நாளை நடைபெறுகிறது என்று அரியலூர் மாவட்ட கலெக்டர் ரமண சரஸ்வதி தெரிவித்துள்ளார்.
அரியலூர் மாவட்ட கலெக்டர் ரமண சரஸ்வதி தகவல் வெளியிட்டுள்ளார். அதில் நாளை திங்கட்கிழமை மற்றும் வருகிற 17, 18,19ம் தேதிகளில் தேசிய குடற்புழு நீக்க மாத்திரை வழங்கும் முகாம் அனைத்து பள்ளி கல்லூரிகள், அனைத்து ஆரம்ப சுகாதார நிலையங்கள், துணை சுகாதார நிலையங்கள் மற்றும் அங்கன்வாடி மையங்களில் நடைபெற உள்ளது என்றும்,இந்த முகாமில் விடுபட்டவர்களுக்கு வருகிற 21-ஆம் தேதி குடற்புழு நீக்க மாத்திரை வழங்கப்படும் என்றும், தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த முகாமில் 1 முதல் 19 வரை வயது வரையில் உள்ளவர்களுக்கும், அங்கன்வாடி குழந்தைகளுக்கு பள்ளி கல்லூரி மாணவ மாணவிகளுக்கும், இளம் பெண்களுக்கும் என மொத்தம் 2,94, 273 பேருக்கு குடற்புழு நீக்க மாத்திரை வழங்கப்படும்.
இந்த முகாமில் பொது சுகாதார பணியாளர்கள், கிராம சுகாதார செவிலியர்கள், மருத்துவப் பணியாளர்கள், அங்கன்வாடி பணியாளர்கள் அனைவரும் ஒருங்கிணைந்து பணிபுரிகிறார்கள். குடற்புழு நீக்க குழந்தைகளுக்கு ரத்த சோகை நோய் வராமல் தடுக்கவும்,நோய் எதிர்ப்பு சக்தி அதிகரித்து சுறுசுறுப்பாக இருக்கவும், அறிவுத்திறன் மற்றும் உடல் வளர்ச்சியை மேம்படுத்தவும், ஆரோக்கியமாக இருக்கவும் இந்த மாத்திரை வழங்கப்படுகிறது என்று தெரிவிக்கபட்டுள்ளது.