Categories
புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்

கோழியை கவ்வி சென்ற மலைப்பாம்பு…. லாவகமாக பிடித்த சிறுவர்கள்…. வனத்துறையினரின் முயற்சி…!!

தோட்டத்திற்குள் புகுந்த மலைப்பாம்பை சிறுவர்கள் லாவகமாக பிடித்துவிட்டனர்.

புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள முக்கண்ணாமலைப்பட்டி மாதா கோவில் தெருவில் பாக்யராஜ் என்பவர் வசித்து வருகிறார். இவரது வீட்டு தோட்டத்தில் மலைப்பாம்பு ஒன்று கோழியை கவ்விக்கொண்டு மரத்தின் மீது ஏறியதை அப்பகுதியில் வசிக்கும் சிறுவர்கள் பார்த்துள்ளனர். இதனையடுத்து சிறுவர்கள் அந்த மலைப்பாம்பை லாவகமாக பிடித்து சாக்கு பையில் அடைத்து உடனடியாக தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.

அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற தீயணைப்பு நிலைய வீரர்கள் மலைப் பாம்பை மீட்டு வனத்துறையினரிடம் ஒப்படைத்தனர். இதனையடுத்து சுமார் 10 அடி நீளமுள்ள அந்த மலைப்பாம்பு நார்த்தாமலை காப்பு காட்டில் விடப்பட்டுள்ளது.

Categories

Tech |