கடகம் ராசி அன்பர்களே…!! இன்று இனிய செய்திகள் இல்லம் தேடி வரக்கூடும். பழைய வாகனத்தை மாற்றம் செய்யும் எண்ணம் உருவாகும். பெற்றோர் வகையில் உங்களுக்கு நன்மைகள் உண்டாகும். வீட்டில் சுபகாரியப் பேச்சுக்கள் நடைபெறுவதற்கான அறிகுறிகள் தோன்றும். இன்று பெற்றோர் வழியில் பிரியம் கூடும், மனதில் துணிச்சலும் கூடும். திட்டமிட்டபடி செயலாற்றி காரிய அனுகூலம் பெறுவீர்கள்.
இன்று மாணவர்களுக்கு சிறப்பான நாளாக இருக்கும். கல்வியில் வெற்றி பெறுவீர்கள். எல்லா கஷ்டங்களும் நீங்கும். மனதில் நிம்மதி உண்டாகும். தொழில் வியாபாரம் இழுபறியாக இருந்தாலும் எந்த பிரச்சினையும் இல்லை, சிறப்பாக தான் இருக்கும். எதிர்பார்த்த பணம் வந்து சேரும். காரிய முடிவில் தாமதமான போக்கு காணப்பட்டாலும் முடிவில் நல்ல பலனை கொடுப்பதாகவே அமையும்.
இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது நீல நிறத்தில் ஆடை அணிந்து கொண்டு செல்லுங்கள். நீலநிறம் உங்களுக்கு அதிஷ்டத்தையே கொடுக்கும். அதுமட்டுமில்லாமல் இன்று முருக பெருமான் வழிபாட்டை மேற்கொண்டு காரியத்தில் ஈடுபடுங்கள், அனைத்து காரியமுமே சிறப்பாக நடக்கும்.
இன்று உங்களுக்கான அதிஷ்ட திசை :வடக்கு
அதிஷ்ட எண்: 2 மற்றும் 6
அதிஷ்ட நிறம்: நீலம் மற்றும் பச்சை நிறம்