மோட்டார் சைக்கிள் மீது வேன் மோதிய விபத்தில் வாலிபர் தலை நசுங்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
திருப்பூர் மாவட்டத்திலுள்ள மாதவரம் பகுதியில் நாகராஜ் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு தொழிலாளியான ஆறுச்சாமி என்ற மகன் இருந்துள்ளார். இந்நிலையில் ஆறுச்சாமி பொன்னாபுரத்தில் உள்ள தனது சகோதரி ராதிகா வீட்டிற்கு செல்ல மாதவரத்தில் இருந்து மோட்டார் சைக்கிளில் புறப்பட்டார். இந்நிலையில் செட்டிபாளையம் சாலையில் வந்து கொண்டிருந்தபோது மின்வாரியம் அலுவலகம் அருகில் தர்பூசணி லோடு ஏற்றி வேன் ஒன்று வந்து கொண்டிருந்தது. இதனையடுத்து வேன் வருவது கண்டு ஆறுச்சாமி ஓரமாக ஒதுங்க முயற்சி செய்துள்ளார். அப்போது எதிரே வந்த வேன் ஒன்று ஆறுச்சாமியின் மோட்டார் சைக்கிள் மீது பயங்கரமாக மோதியது.
இதில் வேனின் பின் சக்கரம் ஆறுச்சாமி தலைமீது ஏறியதில் தலை நசுங்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதனை பார்த்த அருகில் இருந்தவர்கள் இது குறித்து தாராபுரம் காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் ஆறுச்சாமியின் உடலை கைப்பற்றி தாராபுரம் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இது குறித்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் வேனை ஓட்டி வந்த கேரளா மாநிலம் ஆழப்புலா பகுதியில் வசிக்கும் சனோபு என்பவரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.