பேருந்து மோதி விவசாயி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கரூர் மாவட்டத்தில் உள்ள நந்தன்கோட்டை பகுதியில் பாஸ்கர் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் ஒரு விவசாயி. இந்நிலையில் பாஸ்கர் தனது இருசக்கர வாகனத்தில் குளித்தலை சென்று விட்டு திரும்பி வந்து கொண்டிருக்கும் போது முன்னால் சென்ற அரசு பேருந்தை முந்திச் செல்ல முயன்றுள்ளார்.
அப்போது எதிர்பாராவிதமாக பேருந்தின் பின்பக்கம் மோதியதில் மோட்டார் சைக்கிள் கவிழ்ந்து சாலையில் விழுந்துள்ளார். இந்த விபத்தில் பலத்த காயமடைந்த பாஸ்கர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளார். மேலும் இது குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.