Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

சிம்ம ராசிக்கு… “தைரியம் கூடும்”… மதிப்பு கூடும்…!!

சிம்மம் ராசி அன்பர்களே…!! இன்று மறக்க முடியாத சம்பவங்கள் நடைபெறும் நாளாக  இருக்கும். மனதில் தைரியமும், தன்னம்பிக்கையும் அதிகரிக்கும். அடிப்படை வசதி வாய்ப்புகளை பெருக்கிக் கொள்வீர்கள். சகோதர சச்சரவுகள் நீங்கும். இன்று குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழ்நிலை காணப்படும். உறவினர்கள் மத்தியில் மதிப்பு கூடும். கணவன் மனைவிக்கிடையே நெருக்கம் இருக்கும்.

பிள்ளைகளின் செயல்கள் சந்தோசத்தை கொடுக்கும். வீட்டுக்கு தேவையான பொருட்களை வாங்கி திருப்தி அடைவீர்கள். யாரையும் நேருக்கு நேராக எதிர்க்காமல் அனுசரித்துச் செல்வது நன்மையை கொடுக்கும். கெட்ட கனவுகள் தோன்றும். வயிறு தொடர்பான நோய்கள் கொஞ்சம் ஏற்பட்டு நீங்கும்.

இன்று நீங்கள் முக்கியமான பணியை மேற்கொள்ளும் பொழுது ஆரஞ்சு நிறத்தில் ஆடையை அணிந்து கொண்டு செல்லுங்கள். ஆரஞ்சு நிறம் உங்களுக்கு அது அதிஷ்டத்தை கொடுக்கக் கூடிய அளவில் இருக்கும். அது மட்டுமில்லாமல் இன்று முருக பெருமான்  வழிபாட்டை மேற்கொண்டு காரியத்தில் ஈடுபடுங்கள். அனைத்து காரியமும் நல்லபடியாக நடக்கும்.

இன்று உங்களுக்கு அதிஷ்டமான திசை:தெற்கு

அதிஷ்ட எண் : 1 மற்றும் 2

அதிஷ்ட நிறங்கள்: ஆரஞ்சு மற்றும் மஞ்சள் நிறம்

Categories

Tech |