Categories
மாவட்ட செய்திகள் ராணிப்பேட்டை

“வேலை வாய்ப்பு முகாம்” ஆணை வழங்கிய உதயநிதி ஸ்டாலின்…. ஊராட்சி மன்ற தலைவருக்கு பாராட்டு…!!

வேலை வாய்ப்பு முகாமில் தேர்ச்சி பெற்ற இளைஞர்களுக்கு பணி நியமன ஆணையை எம்.எல்.ஏ வழங்கியுள்ளார்.

ராணிப்பேட்டை மாவட்டத்தில் எம்.எல்.ஏ காந்தி தலைமையில் நடைபெற்ற மாபெரும் வேலை வாய்ப்பு முகாமில் ஏராளமான இளைஞர்கள் கலந்து கொண்டனர். இந்த வேலைவாய்ப்பு முகாமை மாவட்ட தொழில்நெறி வழிகாட்டும் மையம் மற்றும் ஜி.கே உலக பள்ளி இணைந்து சிறப்பாக நடத்தியது. இந்த விழாவின் சிறப்பு விருந்தினராக தி.மு.க இளைஞரணி செயலாளர் எம்.எல்.ஏ உதயநிதி ஸ்டாலின் கலந்து கொண்டார்.

இந்த வேலைவாய்ப்பு முகாமில் ஏராளமான  இளைஞர்களுக்கு வேலை கிடைத்தது. இவர்களுக்கு எம்.எல்.ஏ பணி நியமன ஆணையை வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் நெமிலி ஒன்றியக்குழு தலைவர் வடிவேலு, சயனபுரம் ஊராட்சி ஒன்றிய தலைவர் பவானி வடிவேலு, கைத்தறி மற்றும் துணிநூல் அமைச்சர் காந்தி, அரக்கோணம் நாடாளுமன்ற உறுப்பினர் ஜெகத்ரட்சகன் ஆகியோர் கலந்து கொண்டனர். இவர்களுக்கு எம்.எல்.ஏ உதயநிதி ஸ்டாலின் அவர்கள் வாழ்த்து கூறினார்.

Categories

Tech |