விஜய் ஆண்டனி பதிவு ஒன்றை வெளியிட்டு மக்களிடையே குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளார்.
நடிகர், பாடகர் என பன்முகத் தன்மை கொண்டவராக வலம் வருபவர் விஜய் ஆண்டனி. சென்ற 2016 ஆம் வருடம் விஜய் ஆண்டனியின் பிச்சைக்காரன் திரைப்படம் ரிலீஸ் ஆனது. இத்திரைப்படம் விஜய் ஆண்டனிக்கு திருப்புமுனையாக அமைந்தது. இந்தப்படம் பிளாக்பஸ்டர் ஹிட்டானது. இப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து பிச்சைக்காரன்2 உருவாக இருப்பதாக தகவல் வெளியானது. முதல் பாகத்தை சசி இயக்கி இருந்தார். அவர் படங்களில் பிசியாக இருப்பதால் பிச்சைக்காரன்2-வை பிரியா கிருஷ்ணசாமி இயக்க இருப்பதாக சென்ற வருடம் தகவல் வெளியானது. ஆனால் பிரியா கிருஷ்ணாசாமியும் இப்படத்தை கைவிட்டார். இதனால்
விஜய் ஆண்டனி இத்திரைப்படத்தை இயக்குவதாக அதிரடி அறிவிப்பை அறிவித்தார். இத்திரைப்படத்தின் மூலம் விஜய் ஆண்டனி இயக்குனராக அறிமுகமாகிறார். இத்திரைப்படத்தில் ஹீரோ, இயக்குனர், பாடல், படத்தொகுப்பு, தயாரிப்பு என அனைத்தையும் விஜய் ஆண்டனியை மேற்கொள்கின்றார். அண்மையில் “பிகிலி யோட எதிரி யாரு” என்ற போஸ்டர் வெளியாகி அனைவரையும் குழப்பம் அடையச் செய்தது. இதனைத் தொடர்ந்து விஜய் ஆண்டனி இதை தெரியப்படுத்தும் வகையில் இது பிச்சைக்காரன் 2 படத்தினுடைய போஸ்டர் எனவும் அந்த ஆண்டி பிகிலி நான் தான் என்று புதிய போஸ்டர் ஒன்றை வெளியிட்டுள்ளார். இந்நிலையில் விஜய் ஆண்டனி “ஆண்டி பிகிலி” என்றால் யார் அந்த “பிகிலி” என்ற குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளார் விஜய் ஆண்டனி.