Categories
கரூர் மாவட்ட செய்திகள்

உடைக்கப்பட்டிருந்த கதவு…. அதிர்ச்சி அடைந்த தாய்…. போலீஸ் வலைவீச்சு….!!

10 பவுன் நகையை மர்மநபர்கள் திருடிச் சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கரூர் மாவட்டத்தில் உள்ள ப.உடையாப்பட்டி தெருவில் ஆரோக்கியராஜ் என்பவர் வசித்து வருகிறார். இவர் கோவையில் இருக்கும் தனியார் நிறுவனத்தில் என்ஜினீயராக வேலை பார்த்து வருகிறார். இவருக்கு கோகிலா என்ற மனைவி உள்ளார். இந்நிலையில் கோகிலாவுக்கு சில மாதங்களுக்கு முன்பாக ஆண் குழந்தை பிறந்தால் அவர்கள் சொந்த ஊருக்கு வந்தனர். பின்னர் மீண்டும் ஆரோக்கியராஜ் தனது மனைவி மற்றும் குழந்தை, தாயுடன் கோவைக்கு திரும்பி சென்றுள்ளார். இதனையடுத்து ஆரோக்கியராஜின் தாயார் கோவையில் இருந்து திரும்பி வந்து பார்த்த போது வீட்டின் முன்பக்க கதவு உடைக்கப்பட்டு இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளார்.

பிறகு உள்ளே சென்று பார்த்ததில் பீரோவில் வைத்திருந்த 10 பவுன் நகையை மர்ம நபர்கள் திருடி சென்றது தெரியவந்துள்ளது. இது பற்றி ஆரோக்கியராஜின் தாயார் காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். அந்த புகாரின் பேரில் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று கைரேகை நிபுணர்கள் உதவியுடன் அங்கு பதிவாகி இருந்த கைரேகைகளை சேகரித்துள்ளனர். மேலும் இது குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தப்பி ஓடிய மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.

Categories

Tech |