Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

“சப்-இன்ஸ்பெக்டர் பணி” எழுத்து தேர்வு…… 2,194இல்…… 1,603 பேர் பங்கேற்பு…..!!

திருப்பூர் சப்-இன்ஸ்பெக்டர் பணிக்கான தேர்வுக்கு 2,194 பேர் விண்ணப்பிருந்த நிலையில் 1603 பேர் மட்டுமே தேர்வு எழுதினர். 

தமிழ்நாடு சீருடை பணியாளர் குழுமத்தின் சார்பில் திருப்பூர் மாவட்ட சப்-இன்ஸ்பெக்டர் பணிக்கான தேர்வு இன்று திருப்பூரில் நடைபெற்றது. இந்த தேர்வுக்கு திருப்பூர் மாவட்டத்தைச் சுற்றியுள்ள 2194 பேர் விண்ணப்பித்திருந்தனர். அதன்படி 1,093 பேருக்கு திருப்பூர்குமரன் மகளிர் கல்லூரியிலும், 891 பேருக்கு இடுவம்பாளையம் அரசு மேல்நிலைப் பள்ளியிலும்  தேர்வுகள் எழுத வசதிகள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

தேர்வு எழுத வரும் விண்ணப்பதாரர்கள் தேர்வு மையத்துக்குள் பந்து முனை பேனா மற்றும் தேர்வு எழுதுவதற்கான அனுமதி கடிதம் உள்ளிட்டவற்றை மட்டும் கொண்டு செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டது. அதன்படி தீவிர பரிசோதனைக்கு பின்பே விண்ணப்பதாரர்கள் தேர்வு மையத்திற்குள் அனுமதிக்கப்பட்டனர்.

மொத்தம் 2197 பேருக்கு தேர்வு எழுத ஏற்பாடு செய்யப்பட்டிருந்த போதிலும், திருப்பூர்குமரன் மகளிர் கல்லூரியில் 852 பேரும் இளவம்பாளையம் அரசு மேல்நிலைப்பள்ளியில் 751 பேரும் என மொத்தம் 1603 பேர் மட்டுமே தேர்வு எழுதினர். மீதமுள்ள 641 பேர் தேர்வு எழுத வரவில்லை தேர்வு முடிந்த பின் அதற்கான விடைத்தாள்கள் திருப்பூர் மாவட்ட தலைமை காவல் நிலையத்தில் பத்திரமாக பூட்டி சீல் வைக்கப்பட்டது.

Categories

Tech |