அமைச்சர் கே.என்.நேருவை விமர்சிக்கும் அடிப்படையில் தர்மபுரி திமுக எம்பி செந்தில்குமார் ட்வீட் செய்துள்ளார். மேல்மருவத்தூர் பங்காரு அடிகளாரை நேரில் சந்தித்த கே.என்.நேரு, தரையில் அமர்ந்திருந்தது சர்ச்சையை ஏற்படுத்தியது. இது தொடர்பாக ட்வீட் செய்த செந்தில்குமார், “சாமியார்களை சந்திப்பது தனிமனித விருப்பம்.
ஆனால் எக்காரணத்தை கொண்டும் நம் சுயமரியாதையை இழக்க வேண்டாம். பெரியார் அண்ணா கலைஞர் அவர்களுக்கு நாம் செலுத்தும் குறைந்தபட்ச மரியாதை நம் சுயமரியாதையை காப்பதே” என்று தெரிவித்துள்ளார். இது தற்போது இணையத்தளத்தில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.