கன்னி ராசி அன்பர்களே..!! இன்று தன வரவு தாராளமாக வந்து சேரும். தடைகள் அகலும். கொடுத்த வாக்கை காப்பாற்றி மகிழ்வீர்கள், பொது வாழ்வில் புதிய பொறுப்புகள் வந்து சேரும். விலகிச் சென்ற விவாகப் பேச்சுக்கள் நல்ல முடிவை கொடுக்கும். இன்று எல்லா பிரச்சினைகளும் தீரும், மனமகிழ்ச்சி ஏற்படும். காரிய அனுகூலங்களும் உண்டாகும், மனோதிடம் அதிகரிக்கும், பயன்தரும் காரியங்களில் ஈடுபடுவீர்கள், செல்வம் சேரும்.
வாகனம் வாங்க எடுத்த முயற்சி கைகூடும். பயணங்கள் மூலம் ஆதாயம் கிடைக்கும். அக்கம் பக்கத்தினரை அனுசரித்துச் செல்வது ரொம்ப நல்லது. இன்று வாகனங்களில் செல்லும் பொழுது ரொம்ப கவனமாக செல்ல வேண்டும். நீண்ட தூரப் பயணங்களின் பொழுது ரொம்ப கவனமாக இருக்க வேண்டும்.
இன்று நீங்கள் முக்கியமான பணியை மேற்கொள்ளும் பொழுது இளம்பச்சை நிறத்தில் ஆடை அணிந்து கொண்டு செல்லுங்கள். இளம் பச்சை நிறம் உங்களுக்கு அதிஷ்டத்தை கொடுக்கக் கூடிய அளவில் இருக்கும். அது மட்டுமில்லாமல் இன்று முருகப் பெருமான் வழிபாட்டை மேற்கொண்டு காரியத்தில் ஈடுபடுங்கள். அனைத்து காரியமும் ரொம்ப நல்லபடியாக நடக்கும்.
இன்று உங்களுக்கு அதிர்ஷ்டமான திசை: கிழக்கு
அதிர்ஷ்ட எண்: 5 மற்றும் 9
அதிர்ஷ்ட நிறம்: இளம்பச்சை மற்றும் நீல நிறம்.