Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

தூத்துக்குடி வளர்ச்சியில் என் பங்கு இருக்கும்….. தமிழிசை சௌந்தரராஜன் சிறப்பு பேச்சு…!!

தூத்துக்குடி மாவட்டம் விரைவில் மிகப்பெரிய வளர்ச்சி அடையும் அதில் எனது பங்கும் கட்டாயம்  இருக்கும் என்று தெலுங்கானா ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்துள்ளார்.

தூத்துக்குடி துறைமுக சங்கத்தில் நேற்றையதினம் சிறந்த ஏற்றுமதியாளர்களுக்கான விருது வழங்கும் விழா நடைபெற்றது. இந்த உலகில் பல்வேறு தொழிலதிபர்களும் அரசியல் தலைவர்களும் பங்கேற்றனர். சிறப்பு விருந்தினராக தெலுங்கானா ஆளுநரும் தமிழகத்தின் முன்னாள் பாஜக தலைவருமான தமிழிசை சவுந்தரராஜன் பங்கேற்று பேசினார்.

நிகழ்ச்சியில் சிறந்த ஏற்றுமதியாளர்களாக தேர்நதெடுக்கப்பட்ட 38 பேருக்கு விருது வழங்கிய, பின் நிகழ்ச்சியில் சிறப்புரையாற்றிய தமிழிசை இவ்வாறு பேசினார், பாரத பிரதமர் நரேந்திர மோடி பதவியேற்ற பின் 15 ஆண்டுகளில் இல்லாத அளவு நாடு வளர்ச்சி அடைந்துள்ளது. உலக அளவில் அதிகம் பால் உற்பத்தி செய்யும் 15 நாடுகளில் இந்தியாவும் ஒன்றாக மாறியுள்ளது.

மேக் இன் இந்தியா திட்டத்தின் மூலம் பல்வேறு இளைஞர்கள் தொழில் தொடங்கி நாட்டை வளர்ச்சிப் பாதைக்கு காரணமாகி உள்ளனர். பாதுகாப்பு துறையில் சொந்த நாட்டு உற்பத்தியில் குண்டு துளைக்காத ஆடைகள், ஆயுதங்கள் உள்ளிட்டவற்றை தயார் செய்வது மோடி ஆட்சியில் முதல் முறையாகும் என்று அவர் பேசினார்.

மேலும்  தூத்துக்குடி மாவட்டம் மிகவும் பிரசித்தி பெற்ற மாவட்டம். கடல், வான், ரயில், சாலை உள்ளிட்ட நான்கு வழித்தடங்களிலும் போக்குவரத்து வசதி மூலம் தாராளமாக தொழில் செய்யலாம். இங்கு தொழில் தொடங்கினால் அது தோல்வியே அடையாது என்று பேசினார். மேலும் தூத்துக்குடி மிக விரைவில் மிகப்பெரிய வளர்ச்சி அடையும் அந்த வளர்ச்சியில் எனது பங்கும் கட்டாயம் இருக்கும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

Categories

Tech |