Categories
சினிமா செய்திகள் தமிழ் சினிமா

“ஆடை அணிவது குறித்து பதிவிட்ட சமந்தா”… விமர்சித்தவர்களுக்கு பதிலடி…!!!

நடிகை சமந்தா ஆடை அணிவது குறித்து இணையத்தில் நீண்ட பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

தமிழ், தெலுங்கு என இரண்டிலும் முன்னணி நடிகையாக வலம் வருபவர் சமந்தா. இவர் பெரும்பாலான முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்துள்ளார். இவர் 2017ஆம் வருடம் நடிகர் நாக சைதன்யாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். நான்கு வருடங்கள் சேர்ந்து வாழ்ந்து கருத்து வேறுபாடு காரணமாக அண்மையில் விவாகரத்து செய்தார் சமந்தா. விவாகரத்திற்கு பிறகு சமந்தா எது செய்தாலும் அனைவரும் கவனித்து வருகின்றனர். இவர் தற்போது விக்னேஷ் சிவன் இயக்கும் “காத்துவாக்குல 2 காதல்” திரைப்படத்தில் நடித்து வருகின்றார்.

அண்மையில் வெளியான புஷ்பா திரைப்படத்தில் “ஓ சொல்றியா மாமா” பாடலுக்கு இவர் நடனமாடியது விமர்சனத்துக்குள்ளானாலும் அனைவரையும் கவர்ந்தது. வலைத்தளங்களில் ஆக்டிவாக செயல்பட்டு வரும் சமந்தா தற்போது கரும்பச்சை நிறத்தில் கவர்ச்சிகரமான ஆடை அணிந்து புகைப்படத்தை பதிவிட்டுள்ளார். இதற்கு பலரும் கருத்து தெரிவித்து வந்த நிலையில் அதுக்கு சமந்தா பதிலளிக்கும் விதமாக பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியுள்ளதாவது, “ஒரு பெண்ணை அலங்காரப் பொருளை வைத்து மதிப்பிடாமல், நம்மை மேம்படுத்துவதில் கவனம் செலுத்தலாமே” என்று நீண்ட பதிவில் கூறியுள்ளார்.

Categories

Tech |