மது பாட்டில்களை விற்பனை செய்த நபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
கரூர் மாவட்டத்தில் உள்ள பரளி ரோடு பகுதியில் சட்ட விரோதமாக மது விற்பனை செய்வதாக காவல்துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது.
அந்தத் தகவலின் பேரில் அப்பகுதிக்கு சென்ற காவல்துறையினர் மது விற்பனையில் ஈடுபட்ட சிவனந்தம் என்பவரை கைது செய்துள்ளனர். மேலும் அவரிடம் இருந்த 10 மது பாட்டில்களை காவல்துறையினர் பறிமுதல் செய்துள்ளனர்.