சட்ட விரோதமாக மது பாட்டில் விற்பனை செய்த நபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
கரூர் மாவட்டத்தில் உள்ள மலைவிதி பேருந்து நிறுத்தம் அருகாமையில் மது விற்பனை செய்வதாக காவல்துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது.
அந்த தகவலின் பேரில் அப்பகுதிக்கு விரைந்து சென்ற காவல்துறையினர் அங்கு மது விற்பனை செய்து கொண்டிருந்த ராஜகண்ணு என்பவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். மேலும் அவரிடம் இருந்த 10 மதுபாட்டில்களை காவல்துறையினர் பறிமுதல் செய்துள்ளனர்.