Categories
திருவண்ணாமலை மாவட்ட செய்திகள்

கயிற்றில் தொங்கிய நிலையில் கிடந்த தலை…. தொழிலாளியின் சாவில் மர்மம்…. திருவண்ணாமலையில் பரபரப்பு….!!

மாயமான தொழிலாளி மர்ம முறையில் தூக்கில் தொங்கியபடி இறந்து கிடந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திருவண்ணாமலை மாவட்டத்திலுள்ள காமராஜர் பகுதியில் மணி என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு 2 மனைவிகள், 5 மகன்கள் மற்றும் 2 மகள்கள் உள்ளனர். இவர் ஆடு மாடுகளை வளர்த்து விவசாய தொழில் செய்து வந்துள்ளார். கடந்த ஜனவரி மாதம் 16-ஆம் தேதி வீட்டிலிருந்து வெளியே சென்ற மணி அதன்பிறகு வீடு திரும்பவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த உறவினர்கள் மணியை பல்வேறு இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. இந்நிலையில் மணியின் பேரன் காமராஜ் முனீஸ்வரன் கோவில் அருகில் ஆடுகளை மேய்ச்சலுக்கு கட்ட வந்துள்ளார். அப்போது அப்பகுதியில் உள்ள முட்புதருக்குள் சென்றுள்ளார். அங்கு மரத்தில் கயிற்றில் தலை மட்டும் தொங்கிய நிலையில் கிடந்துள்ளது. இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த காமராஜ் அக்கம் பக்கத்தில் உள்ளவர்களிடம் தகவல் தெரிவித்துள்ளார்.

அதன்படி பொதுமக்கள் அங்கு சென்று பார்த்த போது இறந்து பல நாட்களான தலை மட்டும் தொங்கிய நிலையில் எலும்புகள் கீழே கிடந்துள்ளது. இதுகுறித்து அவர்கள் திருவண்ணாமலை காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் விசாரணை நடத்தினர். அங்கு மணியின் மோதிரம், ஆடைகள், பர்ஸ் ஆகியவை இருந்துள்ளது. இதனையடுத்து அவரது உறவினர்கள் சம்பவ இடத்திற்கு சென்று பார்த்தபோது மணி என்பதை உறுதிசெய்தனர். இதனைத் தொடர்ந்து காவல்துறையினர் மணியின் தலை மற்றும் எலும்புகளை பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இதுகுறித்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் மணி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது யாரேனும் கொலை செய்து தூக்கில் தொங்க விட்டனரா? என்பது குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |