ரஷ்யப் படைகள் உக்ரைன் நாட்டில் தாக்குதலை தீவிரப்படுத்தியிருப்பதால் அந்நாட்டின் இர்பின் நகரத்திலிருந்து மக்கள் விரைவாக வெளியேறி வருகிறார்கள்.
உக்ரைன் நாட்டின் தலைநகரை கைப்பற்றுவதில் ரஷ்ய படைகள் தீவிரமாக களமிறங்கியுள்ளன. மரியுபோல் நகரத்தில் தாக்குதல்கள் தொடர்கிறது. 17 நாட்கள் நடந்த போரில் தற்போதுவரை 1300 வீரர்கள் உயிரிழந்திருப்பதாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது. ரஷ்ய படையினர் கீவ் நகரை கைப்பற்ற முயற்சி மேற்கொண்டு வருகிறார்கள்.
ரஷ்ய படைகள் கைப்பற்றிய மரியுபோல், கார்கிவ், மைக்கோலைவ், சுமி போன்ற நகர்களில் ஓய்வே இல்லாமல் தொடர்ந்து குண்டு வீச்சு தாக்குதல் மேற்கொள்ளப்படுகிறது. இந்நகர்களைச் சேர்ந்த மக்கள் உணவு, மின்சாரம் மற்றும் தண்ணீர் இல்லாமல் அவதிப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள். இதனால் இர்பின் நகரத்திலிருந்து பொதுமக்கள் அவசரமாக வெளியேறி வருகிறார்கள்.