Categories
திருப்பத்தூர் மாவட்ட செய்திகள்

மொத்தமாக 1 1/2 லட்சம்…. ஏர்ஹாரன்கள் பறிமுதல்…. ஆட்சியரின் உத்தரவு….!!

லாரி மற்றும் பேருந்துகளில் பொருத்தியிருந்த ஏர்ஹாரன்களை போக்குவரத்து அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர்.

திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள தமிழ்நாடு போக்குவரத்து துறை துணை ஆணையர் இளங்கோவன் உத்தரவின் பேரில் போக்குவரத்து அலுவலர் எம்.கே காளியப்பன் மற்றும் அலுவலர்கள் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது வாகனங்களுக்கு ஓட்டுனர் உரிமம் மற்றும் இன்ஷூரன்ஸ் இருக்கிறதா, அதிக பாரம் ஏற்றிச் செல்லப்படுகிறதா, சீட் பெல்ட் அறிந்திருக்கிறார்களா, ஹெல்மெட் அணிந்து செல்கிறார்களா என ஆய்வு செய்துள்ளனர்.

இதனை அடுத்து அதிக ஒலி எழுப்பும் ஏர்ஹாரன் பொருத்தி இருந்த 15 லாரி மற்றும் பேருந்துகளில் இருந்த ஏர்ஹாரன்களை அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர். மேலும் 15 லாரிகள் மற்றும் பேருந்துகளுக்கு மாவட்ட கலெக்டர் உத்தரவின் பேரில் 1 லட்ச ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டு வசூலிக்கப்பட்டுள்ளது.

Categories

Tech |